அடேங்கப்பா.. என்னவொரு நல்ல மனசு! இவர் தான் உண்மையான ஹீரோ! வில்லன் நடிகர் செய்த காரியத்தால் குவியும் வாழ்த்துக்கள்!!

அடேங்கப்பா.. என்னவொரு நல்ல மனசு! இவர் தான் உண்மையான ஹீரோ! வில்லன் நடிகர் செய்த காரியத்தால் குவியும் வாழ்த்துக்கள்!!



actor sudeep adopt 133 years old govt school

தமிழ் சினிமாவில் ஈ என்ற படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் கிச்சா சுதீப். அதனைத் தொடர்ந்து அவர் புலி, முடிஞ்சா இவன புடி, மற்றும் பிரம்மாண்டமாக வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்ற பாகுபலி போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். கன்னடத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சுதீப் கர்நாடக மாநிலத்தில் தனது சொந்த ஊரான சிவமோகாவில் 133 வருட மிகவும் பழமையான ஒரு அரசு பள்ளியை தத்தெடுத்துள்ளார். இந்த பள்ளியின் சுவர்கள் மிகவும் பழுதடைந்துள்ளன. மேலும் மாணவர்களுக்கு தேவையான எந்த வசதிகளும் அங்கு இல்லை.

இந்த நிலையில் அந்தப் பள்ளியின் சுவர்களை சீரமைத்து, கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும், மேலும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அந்தப் பள்ளியில் செய்து கொடுக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் இதற்காக பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.