என்னது! பிகில் படத்தில் விஜய்க்கு டூப்பாக நடித்தது இந்த இளம் நடிகரா?? புகைப்படத்துடன் லீக்கான சீக்ரெட்!

என்னது! பிகில் படத்தில் விஜய்க்கு டூப்பாக நடித்தது இந்த இளம் நடிகரா?? புகைப்படத்துடன் லீக்கான சீக்ரெட்!


actor-sriram-done-doop-for-vijay-in-bigil-movie

அட்லீ கூட்டணியில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். மேலும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருந்தார். அவர்களுடன் டேனியல் பாலாஜி, கதிர், ஆனந்த்ராஜ், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 

பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவான திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் விஜய் வயதான அப்பாவான ராயப்பன் கதாபாத்திரம், மற்றும் கால்பந்து வீரரான மகன் கதாபாத்திரம் என இருரோல்களில் நடித்திருந்தார். 

vijay

இந்நிலையில் இப்படத்தில் இரண்டு கதாபாத்திரங்களும் ஒன்றாக இருக்கும் காட்சியில் விஜய்க்கு இளம்நடிகர் ஸ்ரீராம் என்பவர் டூப்பாக நடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இதனை ஸ்ரீராம் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்தோடு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், மறக்க முடியாத நிகழ்வு. பிகில் படத்தின் சில தருணங்கள் எப்பொழுதும் என் மனதில் நிலைத்திருக்கும். விஜயுடன் இணைந்து பணியாற்றியதற்கு ஆசீர்வதிக்கப் பட்டுள்ளேன் என உற்சாகமாக தெரிவித்துள்ளார்.