சினிமா

விஜய்யுடன் அந்த தருணத்தை மறக்க முடியாது! புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகர்!

Summary:

Actor sreeman shred love today photo

தளபதி விஜய்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அதேபோல விஜய்க்கு ஏகப்பட்ட நண்பர்களும் உள்ளனர். அதில் ஒருவர்தான் ஸ்ரீமன். இன்றைய தமிழ் சினிமாவில் தளபதி இருக்கும் இடமே வேறு. ஆனால் அவரது ஆரம்பகட்ட சினிமா தொடங்கி இன்றுவரை விஜய்யுடன் நட்பு பாராட்டுபவர் நடிகர் ஸ்ரீமன்.

விஜய்யுடன் பல படங்களில் நடித்தவர் ஸ்ரீமன். லவ் டுடே படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். பின் நிலாவே வா, ஃபிரண்ட்ஸ், வசீகரன், சுக்ரன், போக்கிரி, அழகிய தமிழ் மகன், வில்லு, சுறா, பைரவா என இவர்கள் கூட்டணி இன்றுவரை தொடர்கிறது.

இந்நிலையில் நடிகர் ஸ்ரீமன் முதன் முதலாக தளபதி விஜய்யுடன் தான் இணைந்து நடித்த லவ் டுடே படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து என்னால் ஒருபோதும் இதை மறக்க முடியாது என கூறியுள்ளார். 


Advertisement