
actor soori talk about sidha doctor
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும்,கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள சித்த மருத்துவர் வீரபாபு, மூலிகை கசாயம் கொடுத்து நோயாளிகளை குணமாக்கி வருகிறார். இதுகுறித்து நடிகர் சூரி ஒரு அறிக்கை வெளியிட்டு அதில் வீரபாபுவை பாராட்டியுள்ளார்.
அவரை பாராட்டிய நடிகர் சூரி, ‘’கொரோனா ஆறு மாதமாக அனைவரையும் முடக்கிப்போட்டு இருக்கிறது. இந்தநிலையில் சித்த மருத்துவர் வீரபாபு, அவரது மூலிகை கசாயம் மூலமாய் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3500 பேரை குணப்படுத்தி உள்ளார். ஒருவர் கூட உயிரிழப்பு நேரவில்லை.
எல்லாருமே அருகில் வர பயப்படும்போது நோயாளியைத் தொட்டு பரிசோதிக்கின்றார். பலரின் உயிரை காப்பாற்றிய, காப்பாற்றிக்கொண்டிருக்கிற உங்களையும், உங்கள் உடன் இருப்பவர்களையும், அந்த மதுரை மீனாட்சி எப்போதும் காப்பாற்ற வேண்டிக்கொள்கிறேன். மேலும் வீரபாபு கொடுக்கிற கசாயம் கறிக்குழம்பு போல இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement