வேதாளம் தெலுங்கு ரீ-மேக் மாபெரும் தோல்வி; சம்பளத்தை திரும்பி கொடுத்த நடிகர் சிரஞ்சீவி.!
தமிழில் அஜித் குமார், லட்சுமி மேனன், சுருதி ஹாசன், பரோட்டா சூரி, மயில்சாமி, கபிர் சிங், தம்பி ராமையா, ராகுல் தேவ் உட்பட பலர் நடித்து 2015ல் வெளியான திரைப்படம் வேதாளம். இந்த திரைப்படம் வசூலிலும், வரவேற்பிலும் மகத்தான சாதனை படைத்தது.
இந்நிலையில், வேதாளத்தை தெலுங்கில் எடுக்க முடிவு செய்து, சிரஞ்சீவி நடிப்பில் படம் உருவாகியது. இந்த படம் சமீபத்தில் வெளியாகி தோல்வியை சந்தித்தது. மேகர் ரமேஷ் இயக்கத்தில், சிரஞ்சீவி, தமன்னா, கீர்த்தி சுரேஷ், முரளி சர்மா உட்பட பலரும் படத்தில் நடித்திருந்தனர்.
படத்தின் தோல்வியை தொடர்ந்து ரூ.60 கோடி சிரஞ்சீவிக்கு சம்பளம் பேசப்பட்ட நிலையில், அதில் ரூ.10 கோடிக்கான காசோலையை சிரஞ்சீவி தயாரிப்பாளர் அனில் சுங்கராவிடமே திரும்பி கொடுத்துள்ளார். இது அவரது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகின்றன.