சினிமா

மனுஷன் எவ்வளவு கஷ்டப்படுறாரு பாருங்க.. வைரலாகும் நடிகர் சிம்புவின் வீடியோ..

Summary:

நடிகர் சிம்புவின் ஒர்கவுட் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் சிம்புவின் ஒர்கவுட் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு. சமீபத்தில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து சிம்பு தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகவிருக்கும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார்.

இருப்பினும் நடனம் ஆடுவதில் பெயர்போன இவர் தனது அதிக உடல் எடையால் நடிப்பதில் மற்றும் டான்ஸ் ஆடுவதில் கூட சிரமத்தை சந்தித்து வந்தார். இந்நிலையில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தனது உடல் எடையை சுமார் 20 கிலோ வரை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு திரும்பியுள்ளார் சிம்பு.

தற்போது சமூக வலைத்தளத்தில் பயங்கரமான மிகவும் கஷ்டமான சிம்புவின் ஒர்கவுட் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் பழைய மன்மதன் மாதிரி திரும்பி வா தலைவா, வேற லெவல், தலைவா வேற ரகம் பாத்து உஷாரு என கமெண்ட்களை அள்ளி வீசியுள்ளனர். இதோ அந்த வீடியோ


Advertisement