அச்சச்சோ.. படத்திற்காக  இப்படியெல்லாமா செய்வாங்க?.. நடிகர் சிம்பு செய்த காரியத்தை பாருங்களேன்..!

அச்சச்சோ.. படத்திற்காக  இப்படியெல்லாமா செய்வாங்க?.. நடிகர் சிம்பு செய்த காரியத்தை பாருங்களேன்..!


Actor Simbu Loss Weight

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்புவின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்தை ஐசரி கணேஷ் தனது வேல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

அச்சம் என்பது மடமையடா, விண்ணைத்தாண்டி வருவாயா படங்களுக்கு பின் கௌதம் வாசுதேவ் மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரகுமான் ஆகிய மூவரும் கூட்டணியில் மூன்றாம் முறையாக இப்படத்திற்காக இணைந்துள்ளனர். 

Actor simbu

இப்படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், வெந்த தணிந்தது காடு படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு விழா கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெற்றது. 

பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இவ்விழா நடைபெற்ற நிலையில், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் இசை மற்றும் ட்ரெய்லர் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

Actor simbu

இந்த விழாவில் கமல்ஹாசன், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், ஏ.ஆர்.ரகுமான், சிம்பு போன்றோர் பேசியிருந்த பல சுவாரசியமான விஷயங்கள் இணையத்தில் வைரலாகி இருந்தது. 

அந்த வகையில் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகர் சிம்பு குறித்து கூறிய விஷயங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அவர் கூறியதாவது, "எனது அருமை தம்பி சிம்பு இப்படத்திற்காக சுமார் 23 கிலோ உடல் எடையை குறைத்திருக்கிறார்" என்று குறிப்பிட்டு பேசியுள்ளார்.

Actor simbu

முன்னதாக சிம்பு தனது உடல் எடையை குறைத்த அட்மின் என்ற வீடியோ வெளியாகியிருந்ததை தொடர்ந்து, வேல்ஸ் ப்ரோடக்க்ஷன் தயாரிப்பில் அடுத்ததாக வரக்கூடிய கொரோனா குமார் திரைப்படத்திலும் சிம்பு நடிக்கபோவதாக ஐசரி கணேஷ் இவ்விழாவில் தெரிவித்துள்ளார்.