குடியை கெடுக்கும் குடி விளம்பரத்தில் நடிக்கணுமா? - நோ சொன்ன சிம்பு.. நெகிழ்ச்சியை தந்த சம்பவம்.! actor-simbu-avoid-liquor-alcohol-advertisement

நடிகர் சிம்புவின் அட்டகாசமான நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் வெந்து தணிந்தது காடு. இயக்குனர் கௌதமேனனின் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம், ரசிகர்கள் மத்தியில் பலத்தை எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. 

இந்த படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான மறக்குமா நெஞ்சம் பாடலும் நல்ல வரவேற்பு பெற்றது. சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு, பன்முக திறமைகளை கொண்டவர் என்பது நமக்கு நன்கு தெரியும். 

Actor simbu

இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாது சில விளம்பர படத்திலும் நடித்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் பிரபல மதுபான நிறுவனமானது தனது மதுபான விளம்பரத்தில் நடிக்குமாறு சிம்புவை கேட்டுக்கொண்டுள்ளது. 

அதற்காக குறிப்பிட்ட தொகை சம்பளமாகவும் பேரம் பேசப்பட்டுள்ளது. ஆனால், இந்த விளம்பரத்தில் நடிக்க நடிகர் சிம்பு முற்றிலும் நடிக்கமாட்டேன்., எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும், என்னால் நடிக்க மதுபான விளம்பரத்தில் நடிக்க இயலாது என்று தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.