கொட்டி தீர்க்கும் கனமழை! உதவி செய்ய சவால் விடும் நடிகர் சித்தார்த்! என்ன சவால் தெரியுமா?



Actor sidharth new challenge for kerala people

கேரளாவில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் கேரளா மக்கள் படும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். பலரதும் தங்களது உடமைகளை இழந்து உன்ன உணவில்லாமல், உறங்க இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில்  கனமழையால் அம்மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியதால் பல அணைகளின் மதகுகள் திறந்துவிடப்பட்டுள்ளன.  இதனால், கேரள மாநிலம் முழுவதும் வெள்ளக்காடானது. 


அதுமட்டுமின்றி மழை வெள்ளம் சூழ்ந்து ஏராளமான வீடுகள் இடிந்து விட்டன. விவசாய பயிர்களும் மழையால் நாசமடைந்துள்ளது.இதனால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் வெள்ள சேதத்துக்கு உதவ தமிழ் நடிகர்களும் ,மலையாள நடிகர்களும் மேலும் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் நிவாரண உதவிகள் வழங்கி வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் சித்தார்த் கேரள நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் நன்கொடை அளித்துள்ளார் மேலும் இதை அனைவரும் செய்ய வேண்டும் என்பதற்காக தனது த்விட்டேர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார் நடிகர் சித்தார்த்.

    kerala flood

மேலும் கேரள மக்களுக்கு உதவி செய்ய முன்வருமாறு நடிகர் சித்தார்த் பொது மக்களை கேட்டுக் கொண்டு #KeralaDonationChallenge என்ற  ஒரு புதிய சவால் ஒன்றை தொடங்கியுள்ளார். அதாவது பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்கு உதவுவதே இந்த Challenge . அதன்படி நான் எனது சவாலை ஏற்றுக்கொண்டு செய்துவிட்டேன் நீங்களும் சவாலை ஏற்கிறீர்களா? என கேரளா மக்களுக்கு நிவாரண நிதி வழக்கும் தகவலை அளித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 


இதனை ஏற்று கொண்ட பலரும் தங்களால் முடிந்த நிவாரண நிதி வழங்கி சவாலை முடித்ததாக ஆதாரத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.