அடக்கடவுளே.. மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட நடிகை ஸ்ருதிஹாசன்.. நீங்களும் இப்படி பண்ணிட்டிங்களே?.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!! 

அடக்கடவுளே.. மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட நடிகை ஸ்ருதிஹாசன்.. நீங்களும் இப்படி பண்ணிட்டிங்களே?.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!! 



actor-shruthihaasan-nose-surgery

நடிகர் கமலஹாசனின் மகளான சுருதிஹாசன் தமிழ் திரையுலகில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். அதனை தொடர்ந்து இவர் ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் ஹிட் அடித்த நிலையில், ஹிந்தி மற்றும் தெலுங்கு திரையுலகுக்கு பயணித்தார். 

தற்போது அவர் குறைந்த அளவிலான படத்திலேயே நடித்து வருகிறார். இவரும், இவரது காதலரும் பல இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்துவருகின்றனர். இதற்கிடையில் சுருதி தனது முகத்தோற்றத்தை மாற்ற அறுவை சிகிச்சை செய்துகொள்வதாக நெட்டிசன்கள் நீண்ட காலமாகவே அவரை கலாய்த்து வந்தனர்.

Actress shruthihaasan

இதுகுறித்து முன்பே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசிய ஸ்ருதிஹாசன், It's Non of your business.. இருந்தாலும் ஒன்று கூறுகிறேன். நான் என் மூக்கில் மட்டும் சர்ஜரி செய்து கொண்டேன் என்று கூறினார். இந்த நிலையில், தற்போது பேட்டி ஒன்றில் இதுகுறித்து கூறியுள்ளார்.

அதில், ஆம். நான் மூக்கில் சர்ஜரி செய்துகொண்டேன். மூக்கில் அடிபட்ட காரணத்தால் அதனை அழகாக மாற்ற அறுவை சிகிச்சை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் நீங்களும் இப்படி பண்ணிட்டிங்களே.. நம்பவே முடியல என்று அதிர்ச்சியில் கமெண்ட் செய்து வருகின்றனர்.