சினிமா

காதலில் தோல்வியடைந்தவருக்கு.. நடிகர் ஷாருக்கான் கொடுத்த டிப்ஸ்! அட என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!

Summary:

பாலிவுட் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான

பாலிவுட் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். திரைத்துறையில் ஏறக்குறைய 29 ஆண்டுகளை கடந்துள்ள இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஹிந்தி மட்டுமின்றி தமிழிலும் நடிகர் ஷாருக்கான்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் அவர் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் ஷாருக்கானுடன் உரையாடுங்கள் என்ற நிகழ்ச்சியில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்பொழுது ரசிகர்கள் பலரும் அவரிடம் ஏராளமான கேள்விகளை எழுப்பியுள்ளனர். அதற்கு அவர் நகைச்சுவையாகவும் தனக்கே  உரிய ஸ்டைலில் புத்திசாலித்தனத்துடனும் பதிலளித்து வந்துள்ளார். 

      

அப்பொழுது ரசிகர் ஒருவர், காதலில் தோல்வி அடைந்த நபர் அதிலிருந்து மீண்டு வெளிவருவது எப்படி? என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு ஷாருக்கான், அதிலிருந்து நீங்கள் ஒருபோதும் வெளிவர முடியாது. அதனை உங்களது நினைவாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த சோகத்திலிருந்து கற்றுக் கொள்ளுங்கள். மேலும் அதுவே உங்களை வலிமையுடையவராக ஆக்கும் என தெரிவித்துள்ளார். 
 


Advertisement