சினிமா

தாடி, கூலிங் க்ளாஸ்! பயங்கர மாடர்னான உடை! ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய நடிகர் செந்தில்!

Summary:

மிகவும் மாடர்னாக, ஸ்டையிலாக மாறியுள்ள நகைச்சுவை நடிகை செந்திலின் சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

மிகவும் மாடர்னாக, ஸ்டையிலாக மாறியுள்ள நகைச்சுவை நடிகை செந்திலின் சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் யாராலும் மறக்க முடியாத நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் செந்தில். குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவரின் பேவரைட் நகைச்சுவை நடிகர்களில் இவரும் ஒருவர். குறிப்பாக நடிகர் கவுண்டமணியுடன் இணைந்து இவர் செய்துள்ள அட்டகாசங்கள், காமெடிக்கு ஒரே அளவே இல்லை.

சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவர், புது முக நடிகர்களின் வருகை, வயது போன்ற சில காரணங்களால் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். பின்னர் ஒருசில படங்களில் தலைகாட்ட தொடங்கிய இவர் சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராசாத்தி என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

தற்போது பிரபல யூடியூப் சேனல் ஒன்றுடன் இணைந்துள்ள இவர் வெப் சீரிஸில் நடிக்க தொடங்கியுள்ளார். இதனிடையே நடிகர் செந்தில் சமீபத்தில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் சில இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. கூலிங் க்ளாஸ், மாடர்னான உடை, கழுத்தில் செயின் என மிகவும் ஸ்டையிலாக தோற்றமளிக்கிறார் செந்தில்.

பார்ப்பவர்கள் அனைவரும் இது நடிகர் செந்தில்தானா? என்று ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்.

 நடிகர் செந்தில் (புகைப்படம்: இன்ஸ்டாகிராம் )


Advertisement