சென்னையில் காலாவதிதேதி முடிந்துபோன மருந்துகள் மெடிக்களில் விற்பனை?.. சத்யராஜின் மகள் பரபரப்பு குற்றச்சாட்டு..!actor-sathyaraj-daughter-divya-sathyaraj-about-expired

தன்னிடம் சிகிச்சை பெற்று வருபவர் வாங்கிய மருந்தில் 3 மருந்துகளுக்கு காலாவதி தேதி முடிந்து விற்பனை செய்கிறார்கள் என சத்யராஜின் மகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்..

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணராக இருந்து வருகிறார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "என்னுடைய நோயாளி ஒருவர் மருந்து வாங்குவதற்கு மருந்தகத்திற்கு சென்றுள்ளார். அவர் வாங்கிய 4 மருந்துகளில் 3 மருந்து காலாவதி தேதி முடிந்துபோனது. 

Divya Sathyaraj

காலாவதியான மருந்துகளை உபயோகம் செய்வதால் உடல் உபாதைகளால் வரலாம். பல மருந்தகத்தில் இவை தொடர்ந்து வருகிறது. மக்கள் குறிப்பாக குழந்தைகளுக்கு வாங்கும் மருந்துகள், பால் பவுடர், சோப், வீட்டின் பயன்பாட்டிற்கு உள்ள மசாலா பொருட்கள் என ஒவ்வொரு விஷயத்தையும் காலவதிதேதி சோதனை செய்து வாங்குங்கள்.

Divya Sathyaraj

எந்த துறையிலும் தவறுகள் நடைபெற கூடாது. மருத்துவ துறைகளில் தவறுகள் நடந்தால் அது உயிருக்கே ஆபத்தாக முடியும். மருந்தகம் வைத்துள்ளவர்கள் மக்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை வைத்து மருந்து வாங்குகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பணத்தை விட மனிதநேயம் முக்கியம்" என்று பேசினார்.