தளபதி விஜய்யால் வீட்டில் அடி வாங்கிய காமெடி நடிகர் சதீஷ்! என்ன நடந்தது தெரியுமா?

தளபதி விஜய்யால் வீட்டில் அடி வாங்கிய காமெடி நடிகர் சதீஷ்! என்ன நடந்தது தெரியுமா?


actor-sathish-talks-about-his-interesting-life-experien

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் நகைச்சுவை நடிகர் சதீஷ். விஜய், சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார் நடிகர் சதீஷ்.

இந்நிலையில் விஜய்யின் காதலுக்கு மரியாதை படத்தால் தன் வாழ்க்கையில் நடந்த சுவாரசிய சம்பவம் பற்றி கூறியுள்ளார் நடிகர் சதீஷ். பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் நடிகை ஸ்ருதிகாசன் ஹல்லோ சகோ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

Sathish

சினிமாவில் நண்பர்களாக இருக்கும் பிரபலங்களை அழைத்து அவர்களது கடந்தகால வாழ்க்கை, சுவாரசிய சம்பவங்கள் பற்றி சுருதி கேள்வி கேட்பார். அந்த வகையில் கடந்தவாரம் நடிகர் சதீஷ், காமெடி நடிகர் கருணாகரன் கலந்துகொண்டனர்.

அதில் பேசிய நடிகர் சதீஷ், நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது காதலுக்கு மரியாதை படம் வெளியானது. நான் செல்லும் வழியில் படத்திற்கான போஸ்டர் ஓடிக்கொண்டிருந்தனர். நானும் அவர்களுடன் சேர்ந்து ஓடினேன். பின்னர் அவர்களுடன் சேர்ந்து சேலம் வரைக்கும் சென்றுவிட்டேன். இதற்கிடையில் என்னை காணவில்லை என்று குடும்பத்தினர் தேட ஆரம்பித்துவிட்டனர்.

பின்னர் நான் வீடு திரும்பியதும் வீட்டில் செம அடி கிடைத்தது என்று தெரிவித்தார்.