இரும்பு பெண்மணியின் 4ஆம் ஆண்டு நினைவஞ்சலி! அவரை வணங்கி பிரபல முன்னணி நடிகர் வெளியிட்ட உருக்கமான பதிவு!

இரும்பு பெண்மணியின் 4ஆம் ஆண்டு நினைவஞ்சலி! அவரை வணங்கி பிரபல முன்னணி நடிகர் வெளியிட்ட உருக்கமான பதிவு!


Actor sarathkumar tweet about jayalalitha memorial tribute

தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர், 6 முறை முதல்வர் என இரும்பு பெண்மணியாக திகழ்ந்து வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் நாள் இயற்கை எய்தினார். இந்த நிலையில் அம்மா ஜெயலலிதாவின் நான்காவது ஆண்டு நினைவஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியினரும், பொதுமக்களும் புரட்சித் தலைவிக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நடிகரும், ஜெயலலிதாவுடன் கூட்டணி கட்சியாக இருந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான நடிகர் சரத்குமார் அவருக்கு உருக்கமான பதிவுகளுடன் நினைவு அஞ்சலி செலுத்தியுள்ளார்.  

அதில் அவர், "நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்" என்ற பாரதியின் வரிகளுக்கு உதாரணமாக வாழ்ந்து மாபெரும் ஆளுமையாக மக்கள் மனதில் என்றும் உயர்சிறப்புடன் நிலைத்து நிற்கும் புரட்சித்தலைவி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாளில் வணங்குகிறேன் என பதிவிட்டுள்ளார். அத்தகைய பதிவை பகிர்ந்து அவரது மனைவி நடிகை ராதிகா சரத்குமார் அவர்களும் ஜெயலலிதா என்றால் உற்சாகம் என பதிவிட்டுள்ளார்.