பிக்பாஸ் எல்லாம் போங்கு! வெறுப்பில் பொங்கி எழுந்த பிரபல நடிகர்! என்ன கூறியுள்ளார் தெரியுமா?

பிக்பாஸ் எல்லாம் போங்கு! வெறுப்பில் பொங்கி எழுந்த பிரபல நடிகர்! என்ன கூறியுள்ளார் தெரியுமா?


Actor santhanu twitt about bigg boss

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 99 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் சீசன் மூன்று இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வர உள்ளது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 4 பேர் மட்டும் இறுதி வாரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.

சிறப்பாக விளையாடி வந்த தர்சன் நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் உட்பட வீட்டில் இருக்கும் போட்டியாளர்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது. தர்சன் இறுதி வாரத்திற்கு சென்று நிச்சயம் வெற்றிபெறுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

bigg boss tamil

ஆனால், தர்சனின் இந்த திடீர் வெளியேற்றம் பலரையும் ஏமாற்றம் அடைய வைத்துள்ளது. இந்நிலையில் நடிகர் சாந்தனு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தர்சனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதில், Ada po ya !! Indha voting ellam சரியான போங்கு என்று பதிவு செய்துள்ளார்.