#Breaking: நடிகர் சைப் அலிகான் கத்தியால் குத்தப்பட்ட விவகாரம்; குற்றவாளி கைது.!



actor-saif-ali-khan-knife-attacked-accuse-arrested

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, பாந்த்ரா பகுதியில் ஹிந்தி நடிகர் சைப் அலிகான், தனது மனைவி கரீனா கபூர், 2 குழந்தைகளுடன் அடுக்குமாடி குடியிருப்பில் 7 வது மாடியில் வசித்து வருகிறார். நேற்று முந்தினம் இரவில் நடிகரை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தி தப்பிச் சென்றார். இதனால் அவர் சிகிச்சைக்காக லீலாவதி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.

கத்தியால் சரமாரி குத்து

இந்நிலையில், நடிகர் சைப் அலிகானை வீடு புகுந்து கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 6 முறை சைப் அலிகானை கத்தியால் குத்திவிட்டு, மர்ம நபர் தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகளும் பதிவாகி இருந்தன. விசாரணைக்கு பின்னரே நடிகரை கத்தியால் குத்தியதற்கு காரணம் தெரியவரும். 

இதையும் படிங்க: #JustIN: நடிகர் சைப் அலிகானை கத்தியால் குத்தியது யார்? சிசிடிவி கேமரா காட்சியில் புதிய திருப்பம்.!

குற்றவாளி கைது

உண்மையில் திருட்டு முயற்சி நடந்ததா? அல்லது கொலை செய்யும் நோக்கத்துடன் நிகழ்வு நடந்ததா? என விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் தேசிய அளவில் மிகப்பெரிய விவாதத்தை உண்டாக்கி இருக்கிறியாது. மேலும், மகாராஷ்ட்ராவில் மக்களுக்கு பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக எதிர்க்கட்சிகள் வாதத்தை முன்வைத்து வருகின்றன.

இதையும் படிங்க: #JustIN: நடிகர் சைப் அலிகானை கத்தியால் குத்தியது யார்? சிசிடிவி கேமரா காட்சியில் புதிய திருப்பம்.!