சினிமா

நடிகர் ஆர்.ஜே பாலாஜியின் அம்மாவிற்கு கொரோனாவா.! தீயாய் பரவும் தகவல்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Summary:

Actor rj balaji mother affected by corono

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து, பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுத்து பெருமளவில் பிரபலமடைந்து வருபவர் ஆர்ஜே பாலாஜி.

ஆர்.ஜே வாக இருந்த இவர் புகழ், வடகறி, இவன் வேற மாதிரி, கடவுள் இருக்கான் குமாரு, நானும் ரவுடிதான், பூமராங் போன்ற திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து அவர் காமெடி கலந்த அரசியல் திரைப்படமான எல்கேஜி திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி சூப்பர் ஹிட் கொடுத்தார். 

மேலும் ஆர்ஜே பாலாஜி தற்போது நடிகை நயன்தாராவுடன் மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்பொழுது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் தமிழகத்தில் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையாக்கப்பட்டுள்ளது. மேலும் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில் நடிகர்-நடிகைகள் அனைவரும் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் தற்போது நடிகர் ஆர்.ஜே.பாலாஜியின் அம்மாவிற்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக செய்திகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர்  சென்னை அமிஞ்சுக்கரை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 


Advertisement