அரசியல் தமிழகம் சினிமா

பாமகவில் இணைந்த பிரபல தமிழ் நடிகர்...!

Summary:

actor-ranjith-in-pmk

தமிழ் அந்த கால கட்டத்தில் பெயர் சொல்லும் அளவிற்கு நன்றாக நடித்து வந்த பிரபல நடிகர் தான் ரஞ்சித் அவர்கள். அவர் சுமார் 1990 - 2000 வரை திரைப்படத்தில் நடித்து வந்தார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் கதாநாயகனாகவும், வில்லனாகவும், குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழில் சிந்துநதிப் பூ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அதற்கு பிறகு பல தமிழ் படங்களில் நடித்து ஒரு நிலையான நடிகராக திகழ்ந்தார். 

இந்நிலையில் அவருக்கு அரசியலில் வரும் ஆசையும் இருக்கிறது என்ற தகவல் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்த நடிகர் ரஞ்சித் கடந்த ஜூலை மாதம் தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கினார். 
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், இளைஞரணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் MP ஆகியோரை சந்தித்து தன்னை பாட்டாளி மக்கள் கட்சியில் இணைத்துக்கொண்டுள்ளார். 

பாட்டாளி மக்கள் கட்சியில் இணைத்துக்கொண்ட நடிகர் ரஞ்சித்துக்கு பாமக மாநிலத்துணைத்தலைவர் பொறுப்பினை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வழங்கி உத்தரவிட்டுள்ளார். இதிலிருந்து நான் நம் கட்சிக்காக பாடுபடுவேன் என்று நடிகர் ரஞ்சித் கூறியுள்ளார். 

ரஞ்சித் அவர்கள் அரசியல் பயணத்தை தொடங்கும்  போது பாமக மாநிலத்துணைத்தலைவர் பொங்கலூர் மணிகண்டன், மாநில இளைஞரணி செயலாளர் ராஜேஸ்வரி பிரியா உள்ளிட்டோர் உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது. இனிதே எனது அரசியல் பயணம் ஆரம்பம் என்ற மகிழ்ச்சியுடன் இருக்கிறார் நடிகர் ரஞ்சித்...


Advertisement