சினிமா

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் முழு சொத்து மதிப்பு இத்தனை கோடியா....! கசிந்த தகவல்...

Summary:

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் முழு சொத்து மதிப்பு இத்தனை கோடியா....! கசிந்த தகவல்...

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். அவர் இறுதியாக நடித்த அண்ணாத்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தின் 169வது  படத்தில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில் சமீபகாலமாக முன்னணி நட்சத்திரங்களின் சொத்து மதிப்பு குறித்து தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில்  தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்தின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 410 கோடி இருக்கும் என்று தகவல்  வெளியாகியுள்ளது. இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை. 

 

 

 


Advertisement