முதல் படமே வேற லெவல்! இளைஞர்கள் கட்டாயம் பார்க்கவேண்டும்! பிரமித்து பாராட்டிய நடிகர் ரஜினி!

முதல் படமே வேற லெவல்! இளைஞர்கள் கட்டாயம் பார்க்கவேண்டும்! பிரமித்து பாராட்டிய நடிகர் ரஜினி!


Actor rajini wish madhavan rocketry movie

நடிகர் மாதவன் இயக்கி, தயாரித்து, நடித்திருக்கும் திரைப்படம் தி ராக்கெட்ரி- நம்பி எஃபெக்ட். இந்த படம் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, அவர் வாழ்க்கையில் பட்ட சிரமங்கள் போன்றவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. 

இதில் நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் மாதவன் நடித்திருந்தார். இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் கடந்த ஜூன் 1ந் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், ராக்கெட்ரி படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், ராக்கெட்ரி திரைப்படம்-அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும், குறிப்பாக இளைஞர்கள். நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சிக்காக பல துன்பங்களுக்கு உள்ளாகி, தியாகங்கள் செய்து அரும்பாடுபட்ட பத்ம பூஷன் திரு. நம்பி நாராயணன் அவர்களின் வரலாறை மிகத் தத்ரூபமாக நடித்துப் படமாக்கி, இயக்குநராக தனது முதல் படத்திலேயே தலை சிறந்த இயக்குநர்களுக்கு இணையாக தானும் நிரூபித்திருக்கிறார் மாதவன். இப்படி ஒரு திரைப்படத்தைக் கொடுத்ததற்காக அவருக்கு என்னுடைய நன்றிகளும், பாராட்டுகளும்  என கூறியுள்ளார்.