உங்களை திருப்தி படுத்த என்னால் முடியும்! ஆனால் உங்களால் முடியுமா? ராகவா லாரன்ஸிற்கு சவால் விடும் நடிகை ஸ்ரீ ரெட்டி!

உங்களை திருப்தி படுத்த என்னால் முடியும்! ஆனால் உங்களால் முடியுமா? ராகவா லாரன்ஸிற்கு சவால் விடும் நடிகை ஸ்ரீ ரெட்டி!


Actor rahava lawrance replied to actress sri reddy

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி தன்னை நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலபேர் ஏமாற்றி விட்டதாக நடிகை ஸ்ரீ ரெட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்காக அரை நிர்வாண போராட்டம் நடத்தினர் நடிகை ஸ்ரீ ரெட்டி.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த நடிகை ஸ்ரீ ரெட்டி தமிழ் லீக்ஸ் என்ற பெயரில் நடிகர் ஸ்ரீகாந், இயக்குனர்கள் முருகதாஸ், சுந்தர் சி, ராகவா லாரன்ஸ் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறினார்.


ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டிய யாரும் பதில் அளிக்காத நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் சர்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். 

அதில் அவர் நான் தெலுங்கில் போராளி பட ஷூட்டிங்கின் போது என்னை சந்தித்ததாக ஸ்ரீ ரெட்டி கூறுகிறார். அப்படி பார்த்தால் நான் அந்த படத்தை இயக்கி 7 வருடங்கள் ஆகிறது. இந்த 7 வருடங்கள் என்மீது புகார் அளிக்காத ஸ்ரீரெட்டி, தற்போது இதைபற்றி ஏன் கூறுகிறார்.

மேலும் எனது ஓட்டல் அறைக்கு வந்ததாகவும், அவரை நான் தவறாக பயன்படுத்திக்கொண்டேன் எனவும் ஸ்ரீ ரெட்டி கூறுகிறார். மேலும் எனது ஓட்டல் அறையில், சாமி படங்களும், ருத்ராக்ஷ மாலையும் இருந்ததாக அவர் கூறியுள்ளார். ஓட்டல் அறையில் ருத்ராட்ச மாலையை வைத்து பூஜை செய்ய நான் என்ன முட்டாளா?

      Sri reddy                     

நான் எந்த தவறும் செய்யவில்லை.அது எனக்கும், கடவுளுக்கும் தெரியும் என்பதை ஸ்ரீரெட்டியிடம் நேரடியாகவே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 

எனக்கு ஸ்ரீ ரெட்டியின் பேட்டிகளை பார்க்கும்போதும் பரிதாபமாக இருக்கிறது. 

தான் ஒரு சிறந்த நடிகை என்று ஸ்ரீரெட்டி கூறி வருகிறார். நாம் இருவரும் செய்தியாளர்களை நேரில் சந்திப்போம்.

அவர்கள் முன்பு நான் உங்களுக்கு ஒரு சீனும், சில டான்ஸ் ஸ்டெப்புகளும் தருகிறேன்.அந்த சீனுக்கு தகுந்த மாதிரி ஸ்ரீ ரெட்டி நடித்தும், ஆடியும் காட்ட வேண்டும். உண்மையிலேயே அது நன்றாக இருந்தால், இயக்குநராக உங்களது நடிப்பும், நடனமும் என்னை திருப்தியாக இருந்தால் எனது அடுத்த படத்தில் உங்களுக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன். அதற்கான முன்பணத்தையும் உடனே வழங்குகிறேன் என கூறினார். 

மேலும் நான் எந்த தவறும் செய்யவில்லை, எனவே உங்களை நேரில் சந்திப்பதில் எனக்கு பயமில்லை. 


மேலும் அனைவர் முன்பும் நடித்துக் காட்ட உங்களுக்கு நடித்து காட்ட  விருப்பமில்லை எனில், எனது மேனேஜரை தொடர்வு கொண்டு, உங்களது வழக்கறிஞர்கள் மற்றும் உங்களது நலம் விரும்பிகள் முன்பு நடித்துக் காட்டுங்கள். நான் கண்டிப்பாக வாய்ப்பு வழங்குகிறேன் என கூறினார்.

Sri reddy
இந்நிலையில் தற்போது இந்த சவாலை ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ள ஸ்ரீரெட்டி, மற்றொரு பதிவில் அவருக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.

அதில் நான்விசாரணைக்கு வந்தால் நீங்க தோற்று போயிடுவீங்க,மேலும் எனக்கு திறமை இருக்கிறது உங்களை திருப்தி படுத்தி, உங்க படத்தில் நடிக்க நான் தயார் என கூறியுள்ளார்.