சினிமா

முதல் முறையாக வெளியான நடிகர் பிரகாஷ்ராஜின் அழகிய மனைவி மற்றும் மகன் புகைப்படம்!

Summary:

Actor prakashraj unseen family photos

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் பிரகாஷ் ராஜ். ஹீரோ, வில்லன், குணசித்ர நடிகர் என பல்வேறு கோணங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ். கர்நாடக மாநிலத்தை பூர்விகமாக கொண்ட இவர் தமிழ், கன்னடா, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார்.

இவர் வில்லனாக நடித்த பல்வேறு படங்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. குறிப்பாக விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படம் மாபெரும் வெற்றிபெற ப்ரகாஷிராஜும் மிக முக்கிய காரணம். தற்போது சினிமாவிலும் தாண்டி அரசியலிலும் ஈடுபட்டுவருகிறார் நடிகர் பிரகாஷ்ராஜ்.

இவரது திருமண வாழ்க்கையை பொறுத்தவரை 1994 ஆம் ஆண்டு நடிகை லலிதா குமாரியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2009 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

அதன்பின்னர் பிரபல பெண் நடன இயக்குனர் போனி வெர்மா என்பவரை 2010 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு வேதந் என்ற மகனும் உள்ளார். இதுவரை பெரிதாக வெளிவராத இவர்களது புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது.


Advertisement