சினிமா

தீயாக பரவும் தகவல்: நடிகர் பிரபு தேவாவிற்கு விரைவில் மீண்டும் திருமணம்..?

Summary:

நடிகர் மற்றும் இயக்குனருமான பிரபுதேவுக்கு விரைவில் மீண்டும் திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் மற்றும் இயக்குனருமான பிரபுதேவுக்கு விரைவில் மீண்டும் திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் பிரபுதேவா. நடிகர், டான்ஸ் மாஸ்டர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து அந்த திருமணம் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்தில் முடிந்தது. மேலும் இவருக்கு மூன்று மகன்கள் இருந்தநிலையில் முதல் மகன் விஷால் கடந்த 2008 ஆம் ஆண்டு மூளை கட்டியால் பாதிக்கப்பட்டு 12 வயதில் உயிரிழந்தார்.

இந்நிலையில்தான் பிரபுதேவா, நயன்தாரா இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகமாகி அவர்கள் காதில் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. பின்னர் இருவரும் பிரித்துவிட்டநிலையில் தற்போது பிரபுதேவா பெண் ஒருவரை காதலித்துவருவதாகவும், இருவரும் டேட்டிங் செய்துவருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தெரிகிறது. ஆனால் இது குறித்து இதுவரை பிரபுதேவா தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரபூர்வ தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறித்துப்பிடத்தக்கது.


Advertisement