சினிமா

துளிகூட மேக்கப் இல்லாமல் அழகிய சிரிப்புடன் அசத்தும் நடிகை பூனம்பஜ்வா! வைரல் புகைப்படம்...

Summary:

நடிகை பூனம்பஜ்வா லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.

நடிகை பூனம்பஜ்வா லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.

பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்த இவர், தமிழ் சினிமாவில் சேவல், தெனாவட்டு ஆகிய படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகை பூனம் பாஜ்வா. ஒருசில படங்களே இவர் நடித்திருந்தாலும், தமிழ் சினிமாவில் இவருக்குக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

பின்னர் அரண்மனை 2, ரோமியோ ஜூலியட் போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்திருந்த இவர்,கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.  முதலில் நாயகியாக வளம் வந்த இவர் தற்போது கிடைக்கும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார்.

தற்போது பட வாய்ப்புகளை எதிர்பார்த்து அம்மணி, சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கிறார். அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் மேக்அப் இல்லாமல் அழகிய சிரிப்புடன் உள்ள குயூட் புகைப்படம்  ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.


Advertisement