சினிமா

சர்க்கார் படத்தில் தூக்கிவீசிய மிக்சியை, ஏலத்தில் விட்ட நடிகர் பார்த்திபன்!.

Summary:

actor parthiban auctioned Sarkar mixie


சன்டிவி தொலைக்காட்சியில் நடிகர் விஷால் "சன் நாமொருவர்" என்ற நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குகிறார். அந்த நிகழ்ச்சியில் மிகவும் பாதிக்கப்பட்டோரை அழைத்துவந்து, அவர்களின் வாழ்க்கையை உயர்த்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு சினிமா பிரபலம் அந்த நிகழ்ச்சிக்கு வந்து, அங்கு வந்திருக்கும் பாதிக்கப்பட்டோருக்காக, கொடுக்கப்படும் டாஸ்க்குகளை செய்து அதில்வரும் தொகையை பாதிக்கப்பட்டோருக்கு கொடுக்கின்றனர்.

சன்டிவியில் ஒளிபரப்பாகும் இந்த சன் நாமொருவர் நிகழ்ச்சி, குழந்தைகள் மற்றும் முதியவர்களின் மனதில் பதியவைத்துள்ளது. மக்களுக்கு உதவும் வகையிலான இந்த நிகழ்ச்சி, மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

கடந்தவாரம் நடைபெற்ற நிகழிச்சியில், நடிகர் பார்த்திபன் சிறப்பு விருந்திரைனராக கலந்துகொண்டு, அங்கு வந்த பாதிக்கப்பட்டவருக்காக பழைய பொருட்களை ஏலத்தில் விட்டு அதில் வந்த தொகையை கொடுத்து உதவினார்.

அந்த நிகழ்ச்சிக்கு வந்த பாதிக்கப்பட்டவருக்காக நடிகர் பார்த்திபன் பல பொருட்களை ஏலத்தில் விட்டார். அப்போது ஒரு மிக்சி ஒன்றை ஏலத்தில் விட்டார். அவர் அந்த மிக்சி பற்றி கூறும்போது, இந்த மிக்சி சர்க்கார் படத்தில் தூக்கிவீசப்பட்ட மிக்சி என கூறி அந்த மிக்சியை விற்பனை செய்தார்.


Advertisement