காதல் தோல்வி; பலமுறை தற்கொலை முயற்சி; நடிகர் பாக்யராஜின் மகள் தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களை இயக்கி பிரபல இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் பாக்கியராஜ். இவர் தமிழில் முன்னணி நடிகையாக திகழ்ந்த பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு சரண்யா என்ற மகளும், சாந்தனு என்ற மகனும் உள்ளனர்.
இவர்களில் சரண்யா பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த பாரிஜாதம் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஒரு சில படங்களிலேயே நடித்த அவர் பின்னர் சினிமாவை விட்டு விலகினார்.. சரண்யா ஆஸ்திரேலியாவை சேர்ந்த இந்தியர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் இவரது காதல் தோல்வியை தழுவிய நிலையில் மனமடைந்த அவர் மூன்று முறை தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
அப்பொழுதெல்லாம் தனது மகளை நடிகர் பாக்யராஜ் காப்பாற்றி அவரை சமாதானப்படுத்தி வந்துள்ளார். 38 வயதாகியும் சரண்யா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. மேலும் அவர் தனியாக ரீடைல்ஸ் மற்றும் ஷாப்பிங் தொழிலை ஆரம்பித்து அதனை செய்து வருகிறார். அதுமட்டுமின்றி நடிகை ஹன்சிகாவின் 51வது படத்தில் ஸ்கிரீன் ப்ளே வேலையையும் சரண்யா செய்துள்ளாராம்.