சினிமா

சார்பட்டா பரம்பரைக்காக இயக்குனர் ரஞ்சித்தை பாராட்ட மாட்டேன்! ஆனால்.. நடிகர் நாசர் அனுப்பிய கடிதத்தை பார்த்தீர்களா!!

Summary:

கடந்த சில தினங்களுக்கு முன்பு பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ச

கடந்த சில தினங்களுக்கு முன்பு பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சார்பட்டா பரம்பரை. 1970-களில் நடைபெற்ற குத்துச்சண்டை விளையாட்டை மையமாகக் கொண்டு  உருவான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

 இந்த படத்தில் ஆர்யா, பசுபதி துஷாரா விஜயன், ஜான் கொக்கன், ஷபீர்,ஜான் விஜய்  உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சார்பட்டா பரம்பரை படத்திற்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் ரஞ்சித்துக்கு வாழ்த்துக் கூறி நடிகர் நாசர் அவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர், 'தம்பி ரஞ்சித் நான் உன்னை பாராட்ட மாட்டேன். உங்கையப் புடிச்சு ஒரு நூறு முத்தங்களைக் கொடுத்து நன்றின்னு ஒரு வார்த்தை மனசார சொல்லுவேன். இப்படி ஒரு படம் எஞ்சமூகத்துக்கு கொடுத்ததுக்கு' என மனதார பாராட்டியுள்ளார்.


Advertisement