சினிமா

கமலின் அந்த படத்திற்காக, வயதான தோற்றத்திற்கு மாறிய பிரபல நடிகர்! யார்னு பார்த்தீர்களா! வைரலாகும் புகைப்படம்!!

Summary:

உலக நாயகன் கமல் அடுத்ததாக விக்ரம் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை மாஸ்டர் படத்தின்

உலக நாயகன் கமல் அடுத்ததாக விக்ரம் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இது நடிகர் கமலின் 232வது படமாகும். மேலும் இந்த படத்தை நடிகர் கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ்  நிறுவனம் தயாரிக்கிறது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விக்ரம் படத்தில் நடிகர் நரேனும் இணைந்திருப்பதாக தற்போது தகவல்கள் பரவி வருகிறது. அதாவது தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமான நடிகர் நரேன் வயதான தோற்றத்தில் இருப்பது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் 40 ஆண்டுகளுக்கு பிறகு இப்படித்தான் இருப்பேன் எனவும் பதிவிட்டுள்ளார்.

மேலும் அதில் இந்த புகைப்படத்தை எடுத்தது லோகேஷ் கனகராஜ் என பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் நடிகர் நரேனும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் விக்ரம் படத்தில் நடிக்கிறார் எனவும், அதுவும் வயதான கெட்டப்பில் நடிக்கிறார் எனவும்  கூறிவருகின்றனர். ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.


Advertisement