சினிமா

வாவ்.. எம்புட்டு அழகு.. நடிகர் நகுல் மகளுடன் உள்ள குயூட் வீடியோ!

Summary:

நடிகர் நகுல் மகள் அகிராவுடன் உள்ள வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். எம்புட்டு அழகா இருக்கான்ன

நடிகர் நகுல் தனது மகள் அகிராவுடன் உள்ள வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் பாய்ஸ் திரைப்படம்  மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் நகுல். பாய்ஸ் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை தந்தது. பின்னர் காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றார் நகுல்.

தொடர்நது இவருக்கு படவாய்ப்புகள் குவிய தொடங்கியது. மாசிலாமணி, கந்தகோட்டை, நான் ராஜாவாக போகிறேன், வல்லினம். தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பிரம்மா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் நகுல்.  சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவர் தனது நெருங்கிய தோழி மற்றும் காதலியான ஸ்ருதி பாஸ்கர் என்பவரை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.  இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு அகிரா என பெயர் வைத்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா காரணத்தால் படப்பிடிப்புகள் எதுவும் இல்லாத நிலையில் வீட்டில் இருக்கும்  நகுல் தனது குழந்தையுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.அந்த வகையில் ஆனந்த யாலை பாட்டுக்கு அவர் குழந்தையின் ரியாக்சனை பாருங்க... செம குயூட். இந்த வீடியோ இணையத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement