வாவ்..செம க்யூட்!! நடிகர் நகுலின் செல்லமகளை பார்த்திருக்கீங்களா! வைரலாகும் புகைப்படம்! கொஞ்சி தள்ளும் ரசிகர்கள்!

வாவ்..செம க்யூட்!! நடிகர் நகுலின் செல்லமகளை பார்த்திருக்கீங்களா! வைரலாகும் புகைப்படம்! கொஞ்சி தள்ளும் ரசிகர்கள்!


actor-nagul-daughter-photo-viral

தமிழ் சினிமாவில் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் நகுல். பின்னர் அவர் காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றார். அதனை தொடர்ந்து அவர், ஏராளமான திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

 நகுல் நடிகை தேவயானியின் தம்பி ஆவார். இவர் நடிகராக மட்டுமின்றி ஏராளமான ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார். இந்நிலையில் அவர், கடந்த 2016 ஆம் ஆண்டு தனது காதலி ஸ்ருதி பாஸ்கர் என்பவரை  திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி 4 ஆண்டுகளான நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி நடிகர் நகுல் மற்றும் ஸ்ருதி தம்பதியினருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. 


குழந்தைக்கு அவர்கள் மிகவும் வித்தியாசமாக அகிரா என பெயர் வைத்துள்ளனர். இதனை மிகவும் உற்சாகத்துடன் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்து இருந்தனர். இந்நிலையில்  தனது செல்ல மகளுடன் கார்த்திகை  திருநாளைக் கொண்டாடிய புகைப்படங்களை நகுல் இன்ஸ்டாகிராம் பகிர்ந்துள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் செம க்யூட் என குழந்தை கொஞ்சி வருகின்றனர்.