"நடிகர் முரளியின் இளைய மகனும் சினிமாவில் நடிக்கிறாரா?!" என்ன படம் தெரியுமா.?

"நடிகர் முரளியின் இளைய மகனும் சினிமாவில் நடிக்கிறாரா?!" என்ன படம் தெரியுமா.?


Actor murali second son acting in paiya movie

1984ம் ஆண்டு வெளியான திரைப்படம் "பூவிலங்கு". இதில் நடிகர் முரளி முதலில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தொடர்ந்து புது வசந்தம் , இதயம், தங்கமணி ரங்கமணி, குடும்பம் ஒரு கோவில், தப்புக்கணக்கு, கைவீசம்மா கைவீசு, கடல் பூக்கள் என பல படங்களில் நடித்துள்ளார்.

murali

2001ஆம் ஆண்டு "கடல் பூக்கள்" படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதினை வென்றுள்ள முரளி, தனது மூத்த மகன் அதர்வா அறிமுகமான "பாணா காத்தாடி" திரைப்படத்தின் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். அதுவே அவரது கடைசி திரைப்படமாக அமைந்தது.

தற்போது அதர்வா திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் நிலையில், தற்போது முரளியின் இளைய மகன் ஆகாஷ் சினிமாவில் நடிக்கிறார். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிகர் விஜயின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் படத்தில் ஆகாஷ் நடிக்கிறார்.

murali

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது ஆகாஷ் இயக்குநர் லிங்குசாமியின் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது பையா படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.