இந்தியா சினிமா

தனது மனைவியுடன் வாக்களித்த நடிகர் மாதவன்; வைரலாகும் புகைப்படம்.!

Summary:

actor mathavan with wife vote in mumbai

பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான அலைபாயுதே என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மாதவன். முதல் படமே மாபெரும் வெற்றிப்படம் என்பதால் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். சாக்லேட் பாயாக இருந்த மாதவன் இறுதிச்சுற்று படத்தில் தனது தோற்றத்தை மாற்றி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

தற்போது இஸ்ரோ விஞ்ஞானி விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகி வரும் ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட் என்ற படத்தில் நடித்துவருகிறார் நடிகர் மாதவன். இந்த படத்திற்காக அச்சு அசலாக நம்பி நாராயணன் போலவே தனது தோற்றத்தை மாற்றினார். 

இந்நிலையில், இந்தியா முழுவதும் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் தற்போது நான்காம் கட்ட வாக்குப்பதிவாக இன்று மும்பை உள்ளிட்ட 9 மாநிலங்களில் 72 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. அந்த வகையில் தற்போது தமிழ், ஹிந்தி மொழிகளில் பிரபல நடிகரான மாதவன், மனைவி சரிதாவுடன் பிஎம்டபிள்யூ கே1600 பைக்கில் சென்று வாக்களித்துள்ளார். அந்த பைக்கின் விலை ரூ. 30 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


Advertisement