13 வருட காதல்.! நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளுக்கு திருமணம்.! மாப்பிள்ளை யார் பார்த்தீங்களா!!
இறப்பதற்கு முன்பு தனது ரீல் மகளுக்கு நடிகர் மாரிமுத்து அனுப்பிய கடைசி வீடியோ.! கண்கலங்கும் ரசிகர்கள்!!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்ற எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து பெருமளவில் பிரபலமடைந்தவர் நடிகர் மாரிமுத்து. அவர் சில மாதங்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மரணம் திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நடிகர் மாரிமுத்துவின் மறைவிற்கு பின்பு எதிர்நீச்சல் தொடர் பின்னடைவை சந்தித்து வருகிறது. அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் மாரிமுத்து தான் இருப்பதற்கு முன்பு எதிர்நீச்சல் தொடரில் தனக்கு மகளாக நடித்த மோனிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வீடியோ அனுப்பியுள்ளார்.
அதாவது அவர், மோனிஷாவின் சகோதரி பிறந்தநாளை அவரது பிறந்தநாள் என நினைத்து வாழ்த்துக் கூறி, நெகிழ்ச்சியாக பேசி வீடியோ ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். பின்னர் அன்று அவரது பிறந்தநாள் இல்லை என தெரிந்ததும், அட்வான்ஸ் வாழ்த்தாக வைத்துக் கொள் என கூறியுள்ளாராம். தற்போது நடிகர் மாரிமுத்து உயிருடன் இல்லாத நிலையில் அண்மையில் தனது பிறந்தநாளை கொண்டாடிய மோனிஷா அந்த வீடியோவை உருக்கமாக தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது.