BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
#Breaking: நடிகர் மகேஷ்பாபுவின் தந்தைக்கு திடீர் நெஞ்சு வலி.. கவலைக்கிடமான வகையில் மருத்துவமனையில் ஊசலாடும் உயிர்..! ரசிகர்கள் சோகம்..!
70-களில் தெலுங்கில் கொடிகட்டி பறந்த மூத்த நடிகர் கிருஷ்ணா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் சூப்பர்ஸ்டாராக இருந்து வருபவர் நடிகர் மகேஷ் பாபு. இவரின் தந்தை கிருஷ்ணா. 70, 80களில் தெலுங்கு சூப்பர்ஸ்டாராக இருந்து வந்த கிருஷ்ணா, இன்று வரை 350 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இதுதவிர்த்து பல படங்களை தயாரித்தும் தெலுங்கு திரையுலகுக்கு வழங்கியுள்ளார். கிருஷ்ணாவின் தொடர்ச்சியாகவே மகேஷ் பாபு திரைப்படங்களில் நடித்து, அவரும் இன்று தெலுங்கின் சூப்பர்ஸ்டாராக இருந்து வருகிறார்.

இந்நிலையில், 79 வயதாகும் மூத்த நடிகர் கிருஷ்ணாவுக்கு இன்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருவதாகவும், விரைவில் அவரை குணமடைவார் என்றும், 24 மணிநேரத்தில் அவரது உடல்நிலை முன்னேற்றம் அடையும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.