சினிமா

அண்ணா வேற லெவல்! தினந்தோறும் மாஸ்டர் பட நடிகர் செய்துவரும் மாஸான காரியம்! குவியும் பாராட்டுக்கள்!

Summary:

நடிகர் மகேந்திரன் கடந்த ஆண்டு முதல் தினமும் தெரு நாய்களுக்கு உணவு அளிப்பதை வழக்கமாக கொண்டு செய்து வருகிறார்.இதனை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தில்  கதாநாயகியாக மாளவிகா மோகன் மற்றும் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளனர். மேலும் அவர்களுடன் ஆன்ட்ரியா, கௌரி கிஷன், சாந்தனு, மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு  காரணமாக தள்ளிபோனது.  இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு மாஸ்டர் படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் மாஸ்டர் படம் 2021 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சில படங்களில் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பரிச்சயமான நடிகர் மகேந்திரனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் கடந்த ஆண்டு முதல் தினமும் தெரு நாய்களுக்கு உணவு அளிப்பதை வழக்கமாக கொண்டு செய்து வருகிறார். இந்நிலையில் இதுகுறித்த புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ரசிகர் இந்த சேவை தொடர வேண்டும் அண்ணா என கோரிக்கை விடுத்த நிலையில்,  அதற்கு நடிகர் மகேந்திரன் கண்டிப்பாக என உற்சாகத்துடன்  பதில் அளித்துள்ளார்.


Advertisement