அம்மாடி.. கடுமையான ஒர்க் அவுட் செய்யும் லெஜெண்ட் சரவணன்.. ரொமான்ஸ் மூவிக்காக இப்படியா?..! நீ கலக்கு தல..!!

அம்மாடி.. கடுமையான ஒர்க் அவுட் செய்யும் லெஜெண்ட் சரவணன்.. ரொமான்ஸ் மூவிக்காக இப்படியா?..! நீ கலக்கு தல..!!


 Actor legend saravanan workout photo

சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளரான அருள் சரவணன் தயாரித்து நடித்த திரைப்படம் "தி லெஜெண்ட்". இப்படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்கியிருந்த நிலையில், இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தில் அண்ணாச்சிக்கு ஜோடியாக ஊர்வசி ரவுடலா நடித்திருந்தார்.  

Legend saravanan

இவர்களுடன் பிரபு, விவேக், விஜயகுமார், நாசர் மற்றும்  கோவை சரளா உள்ளிட்ட பல நடிகர்களும் நடித்திருந்தனர். இப்படம் கடந்த ஜூலை 28-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தமிழில் தயாரான இந்த படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பலமொழிகளிலும் வெளியாகியிருந்தது. 

Legend saravanan

இந்த நிலையில் சரவணன் தனது அடுத்த படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார். அந்த படம் கமர்சியல் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து தனது புகைப்படத்தை அவர் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த நிலையில், 'ஸ்லிம்மாக மாறி ஆளே அடையாளம் தெரியவில்லை அண்ணாச்சி' என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.