சினிமா

கெளதம் மேனன் படத்தில் வில்லனாகும் பிரபல நடிகர்! வெளியான மாஸ் தகவலால் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Summary:

Actor krishnan act as villain in gawtham menon movie

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களை இயக்கி, முன்னணி இயக்குனராக  இருப்பவர் கௌதம் மேனன். இவர் எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தை தொடர்ந்து ஜோஷ்வா: இமை போல் காக்க, துருவநட்சத்திரம் போன்ற திரைப்படத்தை இயக்கி வந்தார். 

வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜோஷ்வா : இமைபோல் காக்க. இந்த படத்தில் வருண், ராஹி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் படபிடிப்பு ஓரளவிற்கு முடிவுக்கு வந்த நிலையில், இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்புகள் நடைபெற உள்ளது. இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

மேலும் இந்த படத்தின் 'நான் உன் ஜோஸ்வா' என்ற பாடல் வீடியோவும் சமீபத்தில் வெளியிடபட்டது. இந்தப் பாடலின் மூலம் நடிகர் கிருஷ்ணா இந்தப் படத்தில் நடித்திருப்பது உறுதியானது. 
இந்நிலையில் இயக்குநர் கவுதம் மேனன்,  நடிகர் கிருஷ்ணா ஜோஷ்வா: இமைபோல் காக்க திரைப்படத்தில் வில்லனாக நடித்திருப்பதாக  தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து கெளதம் மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில்,  ஜோஷ்வா படத்தின் வில்லன் கிருஷ்ணாவை அறிமுகப்படுத்த வேண்டிய நேரம் இது. எனக்காக இதை ஒப்புக்கொண்டதற்காக நடிகர் கிருஷ்ணாவுக்கு நன்றி. நீங்கள் பார்க்க மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.


Advertisement