மனுஷன் நல்லா ஆகி இப்போதான் வந்தாரு!! அதுக்குள்ள இப்படியா!! நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி..

மனுஷன் நல்லா ஆகி இப்போதான் வந்தாரு!! அதுக்குள்ள இப்படியா!! நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி..


actor-karthick-admitted-in-hospital-again

நடிகர் கார்த்திக் உடல்நல குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்த நடிகர் கார்த்திக் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் கடந்த மாதம் 21ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை முடிந்து மீண்டும் வீட்டிற்கு திரும்பினார் கார்த்திக்.

உடல்நிலை சரியாகிவிட்டாலும், அவர் கட்டாயம் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தார். ஆனால் அவர் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து  மீண்டும் தீவிர பிரசாரம் செய்து வந்தார். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம் முடிந்து நேற்று சென்னை திரும்பிய அவருக்கு திடீரென மீண்டும் மூச்சுத்திணறல், உடல்நல குறைவு ஏற்பட்டு சென்னை அடையாறில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

karthick

உயர் இரத்த அழுத்தம் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.