சினிமா

நடிகர் ஜெயம் ரவியின் முழு சொத்து மதிப்பு இத்தனை கோடியா..? கசிந்த தகவல்...

Summary:

நடிகர் ஜெயம் ரவியின் முழு சொத்து மதிப்பு இத்தனை கோடியா..? கசிந்த தகவல்...

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரது நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் பூமி. இப்படம் ஓரளவிற்கே  ரசிகர்கள்  மத்தியில் வரவேற்பை  பெற்றது.

அதனைத் தொடர்ந்து அவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் அகமது இயக்கத்தில் ஜன கண மன என்ற படத்தில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபகாலமாக முன்னணி நட்சத்திரங்களின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது நடிகர் ஜெயம் ரவியின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ஜெயம் ரவியின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 70 கோடி இருக்கும் என்று திரை  வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்பது தெரியவில்லை.


Advertisement