சினிமா

அச்சோ.. இத்தனையா! நடிகர் ஜெய் மிஸ் செய்த சூப்பர் ஹிட் படங்கள்!! அதுவும் என்னென்னனு பார்த்தீங்களா!!

Summary:

அச்சோ.. இத்தனையா! நடிகர் ஜெய் மிஸ் செய்த சூப்பர் ஹிட் படங்கள்!! அதுவும் என்னென்னனு பார்த்தீங்களா!!

தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெய். அவர் தற்போது பட்டாம்பூச்சி என்ற படத்தில் சைக்கோ வில்லனாக நடித்துள்ளார். இதில் ஹீரோவாக சுந்தர்.சி நடித்துள்ளார்.  இந்த படத்தை அவனி டெலி மீடியா சார்பாக நடிகை குஷ்பூ சுந்தர் தயாரிக்கிறார்.

மேலும் இதில் ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்புகள் முடிவடைந்து படம் வெளியாவதற்கான புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பேட்டியில் கலந்துகொண்ட நடிகர் ஜெய்யிடம், அவர் தவற விட்டு ஹிட்டான படங்கள் குறித்து கேட்கப்பட்டுள்ளது.

அப்பொழுது அவர் கூறியதாவது, சுப்ரமணியபுரம் படத்தை தொடர்ந்து நான் நடிக்கவிருந்த படம் நாடோடிகள். அதேபோல சுப்ரமணியபுரம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே 'எஸ்எம்எஸ்' படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பும் வந்தது.  ஆனால் அப்பொழுது அதிகமாக தாடி வைத்து நடிக்க வேண்டியிருந்ததால் என்னால் மற்ற படங்களில் நடிக்க முடியவில்லை. தொடர்ந்து கவுதம் மேனன் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது, அப்பொழுது நான் மூன்று படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்ததால் நடிக்க முடியாமல் போனது.

பின்னர்தான் தெரிந்தது நான் தவற விட்டது விண்ணைத் தாண்டி வருவாயா பட வாய்ப்பை என்று. அதனை தொடர்ந்து நான் மிஸ் செய்த படம் 'ராட்சசன்', இப்படம் குறித்து ஆறு மாதங்களாக இயக்குனருடன்  பேசி வந்தேன்  ஆனால் படத்தின் பணிகளில் தாமதம் ஏற்பட்டதால் அந்த நேரத்தில் நான் வேறு இரு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டேன் என்று கூறியுள்ளார்.

 


Advertisement