வேற லெவல்! இயக்குனர் நெல்சனுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்து அசத்திய ஜெயிலர் படநடிகர்.! யார்னு பார்த்தீங்களா!!actor-jacky-sheraf-gift-to-director-nelson-4F4R34

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற வெற்றி படங்களை இயக்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாகி தற்போது தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனராக வலம் வருபவர் நெல்சன் திலீப்குமார். அவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

ஜெயிலர் திரைப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷரீஃப், நடிகர் சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜெயிலர் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என கூறப்படுகிறது.

nelson

இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துள்ள பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷரீஃப் விலையுயர்ந்த ஸ்கூட்டர் ஒன்றை நெல்சனுக்கு பரிசாக அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதனை நெல்சன் தனது சமூக வலைதளப் பக்கத்தில், வண்டியில் அமர்ந்தபடி எடுத்து புகைப்படத்தை பதிவிட்டு அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். அது வைரலாகி வருகிறது.