அட.. நடிகை நஸ்ரியாவின் கணவரா இது! நியூ லுக்கில் ஆள் அடையாளமே தெரியாம எப்படி மாறிட்டார்னு பார்த்தீங்களா!

அட.. நடிகை நஸ்ரியாவின் கணவரா இது! நியூ லுக்கில் ஆள் அடையாளமே தெரியாம எப்படி மாறிட்டார்னு பார்த்தீங்களா!


actor-fahad-fazil-latest-photo-viral

மலையாள சினிமாவில் கையெத்தும் தூரத்து என்ற படத்தில் நடித்ததன் மூலம் 
ஹீரோவாக அறிமுகமாகி, பின்னர்  ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள நடிகர் பகத் பாசில். இவர் தமிழ் சினிமாவின் கியூட் நடிகை நஸ்ரியாவின் கணவர் ஆவார்.

நடிகர் பகத் பாசில் மலையாள சினிமாவில் மட்டுமின்றி தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வேலைக்காரன் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். பின்னர் அவர் சூப்பர் டீலக்ஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

fahad fazilஇந்நிலையில் தற்போது அவரது கைவசம் அல்லு அர்ஜுனின் புஷ்பா மற்றும் நடிகர் கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் போன்ற படங்கள் உள்ளன. இந்த நிலையில் தற்போது நீண்ட முடி, தாடியுடன் ஆள் அடையாளமே தெரியாமல் இருக்கும் பகத் பாசிலின் நியூ லுக் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை கண்ட ரசிகர்கள் ஏன் இப்படி மாறிவிட்டீர்கள் என ஷாக்காகியுள்ளனர்.