நடிகர் விவேக்கிற்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிய தனுஷ்.. இந்த உண்மை உங்களுக்கு தெரியுமா ?..! நெகிழ்ந்துபோன ரசிகர்கள்..!actor-dhanush-complete-task-of-vivek

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வந்தவர் நடிகர் விவேக். இவர் கடந்த வருடம் மாரடைப்பால் இறந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இவர் நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி சமூகநல பணிகளிலும் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரும், நடிகர் தனுஷும் இணைந்து வேலையில்லா பட்டதாரி, உத்தமபுத்திரன் மற்றும் படிக்காதவன் போன்ற படங்களில் நடித்திருக்கின்றனர். இவர்களின் காம்போ ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நிலையில், தற்போது தனுஷ் - விவேக்கின் காம்போவை ரசிகர்கள் மிஸ் செய்கின்றனர் என்றே கூறலாம்.

இந்த நிலையில் விவேக் உயிரோடு இருந்தபோது பேட்டியில் கூறிய ஆசையை தனுஷ் தற்போது நிறைவேற்றி வைத்துள்ளார். அதன்படி உத்தமபுத்திரன் படம் இயக்கிய மித்ரன் ஜவகருக்கு தனுஷ் மீண்டும் வாய்ப்பு கொடுத்து முன்னிலையில் நிறுத்த வேண்டும் என விவேக் கூறியிருக்கிறார். 

அதுபோல தனுஷ் திருச்சிற்றம்பலம் படத்தின் மூலமாக விவேக்கின் ஆசையை நிறைவேற்றியுள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் மிகவும் தீயாய் பரவி வருகிறது.