#Breaking: ஆஸ்கரில் மிகப்பெரிய அதிர்ச்சி.. இந்திய படங்கள் தேர்வு இல்லை.. ஷாக் தகவல்.!
என்னது..! இந்த பிரபல வில்லன் நடிகர் முரளியோட தம்பியா? இது தெரியாம போச்சே! செம சர்பிரைசில் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடைந்தவர் டேனியல் பாலாஜி. தமிழில் ஏப்ரல் மாதத்தில் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான அவர் வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வடசென்னை, மற்றும் சமீபத்தில் வெளிவந்த விஜய்யின் பிகில், தனுஷுடன் அசுடன் போன்ற படங்களில் வில்லனாக நடித்திருந்தார்.
மேலும் அவர் தற்போது வெப் சீரியலிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட டேனியல் பாலாஜியிடம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் முரளி உங்களது அண்ணனா என கேட்டுள்ளனர்.
அதற்கு டேனியல் பாலாஜி நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ்நாட்டில் தான். ஆனால் நாங்கள் தெலுங்குகாரர்கள். முரளி கர்நாடகத்தைச் சேர்ந்தவர். ஆனால் எனது அம்மாவும், முரளியின் அம்மாவும் அக்கா தங்கைகள். அந்த வகையில் முரளி எனது அண்ணன் என்று கூறியுள்ளார். இதனை கேட்டு ரசிகர்கள் சர்ப்ரைஸ் அடைந்துள்ளனர்.