20 பேர் கூட வரலை.. அப்படி இல்லைனா நான் உயிரோட இருக்க மாட்டேன்.! வேதனையில் கதறி அழுத நடிகர்!!

20 பேர் கூட வரலை.. அப்படி இல்லைனா நான் உயிரோட இருக்க மாட்டேன்.! வேதனையில் கதறி அழுத நடிகர்!!



Actor cry for people not see his movie

கிருஷ்ணகிரி மாவட்டம், சென்னசந்திரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவர் பூ போன்ற காதல் என்ற படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி அவரே ஹீரோவாகவும் நடித்திருந்தார். இப்படம் அண்மையில் வெளிவந்தது. ஆனால் சரியாக ஓடவில்லை. இந்த நிலையில் மன உளைச்சலில் இருந்த அவர் நான்கு நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

பின்னர் அவர் வீடு திரும்பாத நிலையில், அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.  இதற்கிடையே சுரேஷ் வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் "எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். இந்த படத்திற்காக சென்சார் சான்றிதழ் வாங்க ரூ.5 லட்சம் கடன் வாங்கினேன். நிறைய பேரிடம் கடன் வாங்கியுள்ளேன். கடன் பிரச்சினை அதிகமாக இருக்கிறது. இந்தப் படத்தைதான் நான்  மிகவும் நம்பி இருந்தேன். ஆனால் 20 டிக்கெட் கூட வரவில்லை.

Actor suresh

இப்படியே போனால் கண்டிப்பாக என்னால் உயிர்வாழ முடியாது. நிறைய பேர் உதவி செய்துள்ளனர். அவர்களுக்கு மிக்க நன்றி. நான் உயிரோடு இருக்க வேண்டும் என்றால், நான் சாவதற்கு முன்பு இதனை செய்தியாக போட வேண்டும். அப்போதான் இந்த படத்தை பார்க்க 100 பேர் வருவார்கள். எனது பிரச்சினை கொஞ்சமாவது தீரும். அப்படி இல்லையென்றால் நான் உயிரோடு இருக்க மாட்டேன். இது போல யாரும் படம் எடுக்காதீர்கள். நிறைய பணம் இருந்தால் மட்டுமே படம் எடுங்கள்” என சுரேஷ் கூறியுள்ளார்.