மன்சூர் அலிகானின் சர்ச்சை பேச்சு.! நடிகை திரிஷாவிற்கு ஆதரவாக களமிறங்கிய சூப்பர் ஸ்டார்.! வைரலாகும் பதிவு!!

மன்சூர் அலிகானின் சர்ச்சை பேச்சு.! நடிகை திரிஷாவிற்கு ஆதரவாக களமிறங்கிய சூப்பர் ஸ்டார்.! வைரலாகும் பதிவு!!


actor-chiranjeevi-support-to-trisha-for-masoor-alikhan

சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் மன்சூர் அலிகான் நடிகை திரிஷா குறித்து ஆபாசமாக பேசிய விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவரது பேச்சுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் நடிகை திரிஷா தன்னைக் குறித்து அவதூறாக பேசிய நடிகர் மன்சூர் அலிகானை வன்மையாக கண்டிக்கிறேன். அவர் போன்றவருடன் இனி ஒருபோதும் நடிக்கப் போவதில்லை. இவரைப் போன்ற நபர்களால் மனித குலத்திற்கே அவபெயர் ஏற்படுகிறது என கூறியிருந்தார். மேலும் நடிகர் மன்சூர் அலிகான் நான் எந்த தவறும் செய்யவில்லை. மன்னிப்பு கேட்க முடியாது என கூறி வருகிறார்.

இந்த நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நடிகர் சிரஞ்சீவி திரிஷாவிற்கு ஆதரவாக, த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் கூறிய சில கண்டிக்கத்தக்க கருத்துக்கள் எனது  ஒரு கவனத்திற்கு வந்தது. இந்த கருத்துக்கள் கலைஞருக்கு மட்டுமல்ல, எந்த ஒரு பெண்ணுக்கும் அருவருக்கத்தக்கது. இந்த கருத்துக்கள் கடுமையான வார்த்தைகளால் கண்டிக்கப்பட வேண்டும். 

அவர்கள் வக்கிரத்தால் துவண்டு விடுகிறார்கள். இந்த விவகாரத்தில் திரிஷாவிற்கு ஆதரவாகவும் மேலும் எந்த ஒரு பெண்ணிற்கும் ஆதரவாகவும் நான் நிற்பேன் என தெரிவித்துள்ளார்.