பிடித்த நடிகரை நேரில் பார்த்த ஆவலில் கையில் முத்தம் கொடுத்த ரசிகை.. வைரல் வீடியோ உள்ளே.!

பிடித்த நடிகரை நேரில் பார்த்த ஆவலில் கையில் முத்தம் கொடுத்த ரசிகை.. வைரல் வீடியோ உள்ளே.!



  Actor Bobby Deol Allow girl Fan kiss to Hand 

 

ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் பாபி தியோல். இவர் கடந்த 1995ம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடித்து வருகிறார். பஞ்சாபி மற்றும் ஹிந்தி திரையுலகில் பெரிதும் அறியப்பட்ட நடிகர், தயாரிப்பாளர் தர்மேந்திராவின் மகன் ஆவார். 

சமீபத்தில் இவர் ரன்பீர் கபூருடன் நடித்திருந்த அனிமல் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றுள்ளது. தமிழில் கங்குவா திரைப்படத்தின் மூலமாக இவர் அறிமுகமாக இருக்கிறார். அதைத்தொடர்ந்து, 2 தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். 

இந்நிலையில், நடிகர் தர்மேந்திராவுக்கு ரசிகர் & ரசிகைகள் அதிகம். அவர் அவ்வப்போது தன்னை சந்திக்கவரும் ரசிகர்களை நேரில் சந்திப்பது இயல்பு. அந்த வகையில், சமீபத்தில் பெண் ரசிகை ஒருவரை சந்தித்தார். 

அப்போது, பெண் ரசிகை வியப்புடன் நடிகர் பாபியுடன் பேசிவிட்டு, ஆசையாக கையை பிடித்து முத்தம் கொடுத்தார். அதனை அன்போடு ஏற்றுக்கொண்ட பாபி, மகிழ்ச்சியுடன் இருந்த ரசிகையை சிரித்தபடி அனுப்பி வைத்தார்.