BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய நடிகர் பிளாக் பாண்டி.!
சென்னை பெருமழை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து பலரும் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர். இன்று சென்னை மீனம்பாக்கம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவி செய்யப்பட்டது.
தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம்வந்த பிளாக் பாண்டி, உதவும் மனிதம் சார்பில் மக்களுக்கு அரிசி, உடைகள் உட்பட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

கடந்த 2000ம் ஆண்டு முதல் திரையில் தனக்கு கிடைத்த கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வரும் பிளாக் பாண்டியின் தொண்டுள்ள கொண்ட குணம் பாராட்டுகளை பெற்று வருகிறது.