இரட்டை சந்தோசத்தில் துள்ளி குதிக்கும் பரத், காரணம் என்ன தெரியுமா?

இரட்டை சந்தோசத்தில் துள்ளி குதிக்கும் பரத், காரணம் என்ன தெரியுமா?



actor bharath got boy baby twins

தமிழ் சினிமாவில் இயக்குனர் ஷங்கரின் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பரத்.

 பின்னர் 4 ஸ்டுடென்ட்ஸ், காதல், வெயில் படங்கள் வாயிலாக தனக்கென தனி இடம் பிடித்தார்.மிக குறுகிய இவர்  இவர் வெற்றி தோல்வி என இரண்டையும் பார்த்துவிட்டார்.ஆடல் துறையில் சிறந்து விளங்கும் பரத்திற்கு  பொட்டு, சிம்பா, காளிதாஸ் என படங்கள் வெளி வர வரிசை கட்டி நிற்கின்றது.

இந்நிலையில் கடந்த 2013 இல் துபாயில் வளர்ந்த மலையாளி டென்டிஸ்ட் பெண்ணான ஜெஷ்லி என்பவரை திருமணம் செய்து கொண்டார் .

bharat

இந்நிலையில், பரத் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதில், இரண்டு பண்டல் மகிழ்ச்சி கிடைத்துள்ளதாகவும் இரண்டு இளவரசர்கள் பிறந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தாயும் குழந்தைகளும் நலமாக இருப்பதாகவும்  கூறியுள்ளார். 



பரத்திற்கு  இரட்டை ஆண் பிள்ளைகள் பிறந்ததற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.